சூ. 200 :தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின்
(4)
 

க - து :

கனாக்கண்டுரைத்தல் இன்னுழித் தாயர்க்கும் உரித்தென்கின்றது.
 

பொருள் : தலைவனும்     தலைவியும்    உடன்போக்குச்   சென்ற
நிலைமையுடன் கூற்று  நிகழ்த்துமாயின்  கனாக்கண்டுரைத்தல் செவிலிக்கும்
நற்றாய்க்கும் உரியதாகும்.
 

உம்மை எச்சஉம்மை.  ‘தாய்’  என்றது  ஏவல்  இளையர்  தாய் வயிறு
கரிப்ப  என்புழிப்  போலப் பன்மை  குறித்து நின்றது. அஃது இருவரையும்
குறித்தலை வரும் சூத்திரத்தானும் அறிக.
 

எ - டு :

‘காய்ந்து செலற்கனலி’ என்னும் அகப்பாட்டினுள்(55)

"வயக்களி றன்ன காளையொடு என்மகள்

கழிந்ததற் கழிந்தன்றோ விலனே ஒழிந்துயாம்

ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ

வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு

கண்படை பெறேஎன் கனவ"
 

எனச்  செவிலி  கனவு  கண்டமை கூறியது  காண்க. நற்றாய் கனவு கண்டு
கூறியதாக வரும் இலக்கியம் வந்துழிக் காண்க.