சூ. 123 : | தோழியின் முடியும் இடனுமா ருண்டே |
| (31) |
க - து : | களஞ்சுட்டுதல் தோழிக்கு முரித்தாகும் என்கின்றது. |
பொருள் : தாமே தூதுவராம் நிலை கடந்த தோழியிற் புணர்வின்கண் களஞ்சுட்டுதல் தோழியின் முடிதலும் உண்டு. |
இடம் என்றது பாங்கியாற் கூடும் கூட்டத்தை உணர்த்தி நின்றது. உம்மையான் தோழியிற் புணர்வின்கண்ணும் தலைவி இடஞ்சுட்டுதல் உண்டென்பது பெறப்படும். |
எ - டு : | "செவ்வீ ஞாழற் கருங்கோட் டிருஞ்சினை" |
என்னும் அகப்பாட்டினுள் (240) . . . . வண்டுபட |
| விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப் |
| பூவேய் புன்னையந் தண்பொழில் |
வாவே தெய்ய மணந்தனை செலற்கே எனத்தோழி களஞ்சுட்டியவாறு காண்க. |