தோழி தானே செவிலி மகளே
ஒன்றித் தோன்றும் தோழி பற்றியதொரு விளக்கங்கூறுகின்றது.
பொருள் :தலைவியொடு தோழமை பூண்டொழுகும் ஆயத்தார்பலராயினும் அவருள் கிளந்து கூறப்பெறும் தோழியாவாள் செவிலியீன்றமகளாவாள். தானே என்பதனுள் ஏகாரம் பிரிநிலை. தான், ஈற்றேகாரம்இரண்டும் இசைநிறை.