என்பது குறிஞ்சித்திணையுள் தோழி கூற்று. இதனகத்து வந்துள்ள அருவியும் விடரகமும் அந்நிலத்துப் பொருளாயுள்ளமை தெளிவாம். |
யாரினும் இனியன் பேரன் பினனே |
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் |
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் |
நாறா வெண்பூக் கொழுதும் |
யாணர் ஊரன் பாணன் வாயே |
[குறு-85] |
இது மருதத்திணையுள் தோழி கூற்று. |
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை |
புணரி இடுதிரை தரூஉம் துறைவன் |
புணரிய இருந்த ஞான்றும் |
இன்னாது மன்னோ நன்னுதற் கவினே |
(குறு-109) |
இது நெய்தல் திணையுள் தோழிகூற்று. |
கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப் பேடை |
நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து |
கருங்கட் கருணைச் செந்நெல் வெண்சோறு |
சூருடைப் பலியொடு கவரிய குறுங்காற் |
கூழுடை நன்மனை குழுவின இருக்கும் |
மூதில் ....... ....... ........ ......... .......... |
(நற்-367) |
இது முல்லைத்திணையுள் தோழி கூற்று. பிறவும் அன்ன. |
"நிலம்பெயர்ந் துரையாது" என எதிர்மறை முகத்தாற் கூறினமையின் சிறுபான்மை பிற நிலத்திற்குரிய மாவும் மரமும் மயங்கிவரினும் அமைத்துக் கொள்ளப்படும். |