சூ. 309 :

தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

கூறுதற் குரியர் கொள்வழி யான

(33)
 

க - து :

தோழியும்   செவிலியும்   உள்ளுறை  கூறுதற்குரிய இடமாமாறு
கூறுகின்றது.
 

பொருள்  :   தோழியும்    செவிலியும்    உள்ளுறை     கூறுதலை
மேற்கொள்ளுமிடத்துப் பொருந்தும் இடம் நோக்கிக் கூறுதற்குரியராவர்.
 

தோழிக்குப்   பொருந்துமிடமாவன;   பொதுவாகத் தலைவன், தலைவி,
செவிலி   யாகியோரும்     கற்பின்கண்   வாயில்களுமாம்.  செவிலிக்குப்
பொருந்துமிடமாவன : தலைவி,  தோழி, நற்றாய்   ஆகியோரும்   உடன்
போக்கின்கண் ஆற்றிடைப் பகவர் முதலானோருமாம்.
 

‘கொள்வழியான’ என்றதனான்  பாங்கனும்  பாகனும்  தலைவனிடத்தும்,
வாயில்கள்   தலைவன்,   தலைவி,   தோழியாகி   யோரிடத்தும் பரத்தை
தலைவனிடத்தும்   கூறுதற்  குரியரெனக்   கொள்க. இவர்தாம் உள்ளுறை
கூறுதல்    அருகியன்றி    நிகழாமையான்   எடுத்தோதாமல்   விதப்பாற்
கொள்ளவைத்தார் என  அறிக.   எடுத்துக்காட்டுச்   சங்கத்    தொகைப்
பாக்களுள்ளும் ஏனைய சான்றோர் இலக்கியத்தும் கண்டு கொள்க.