சூ. 139 : | தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப |
|
க - து : | களவின்கண் தந்தை தன்னையர் பற்றியதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவியது களவொழுக்கத்தை அவள் தந்தையும் தமையன்மாரும் குறிப்பினான் உணர்ந்து கொள்ப. |
அக்குறிப்பிற்கு ஏதுவாவார் நற்றாயும் செவிலியுமாவர். |
எ - டு : | "இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று |
| தெருமந்து சாய்த்தார் தலை"
|
(கலி-39) |
என வந்தமை காண்க. |