சூ. 206 : | தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் |
| அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம் |
| மடனொடு நிற்றல் கடனென மொழிப |
(10) |
க - து : | இது தலைவி மடனொடு நிற்குமிடமும் மடனழிய நிற்குமிடமும் இவை எனக் கூறுகின்றது. ‘தலைவி’ என்பது அதிகாரத்தான் வந்தது. |
பொருள்: தலைவன் புறத்தொழுக்கத்தைத் தலைவியிடத்து மறைத்து உரைத்தலும், தலைவனது கூட்டத்தைத் தலைவி விரும்புதலும் ஆகிய அந்நிலைமையல்லாத மற்ற இடங்களிலெல்லாம் தலைவி மடப்பத்தையுடையளாகி நிற்றல் கடப்பாடு என்று கூறுவர் நூலோர். |
எனவே அவ் ஈரிடத்தும் மடனழிய நிற்பாள் என்பதாயிற்று. மடனழிவு என்றது தலைவன் கொளுத்துவன கொள்ளாமல் அவற்றை மாறுபட எண்ணியுறழ்தலாம். |
எ - டு : | "யாரைநீ எம்மில் புகுதர்வாய்" என்னும் மருதக் கலியுள் (98) தலைவன் "வையை வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்" |
என்றவழி |
| ஒ! புனலாடினாய் எனவும் கேட்டேன் புனலாங்கே |
| நீள்நீர் நெறிகதுப்பு வாரும் அறலாக |
| மாண்எழில் உண்கண் பிறழும் கயலாக |
| கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாகம் |
| நாணுச் சிறையழித்து நன்பகல் வந்தஅவ் |
| யாணர்ப் புதுப்புனல் ஆடினாய் முன்மாலை |
| பாணன் புனையாகப் புக்கு" |
எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை எள்ளி உரைத்தமை காண்க. |