சூ. 313 : | தடுமா றுவமம் கடிவரை யின்றே |
(37) |
க - து : | உவமத்தைத் தடுமாறிக் கூறினும் ஆம் என்கின்றது. |
பொருள் : இஃது இப்பொருளை ஒக்கும் என வரையறுத்தற்கு இயலாமல் சிலவும் பலவுமாகத் தடுமாறிவரும் உவமமும் நீக்கப்படுதலில்லை. |
தடுமாறுவமும் என்னும் எச்சவும்மை தொக்கு நின்றது. இதனைத் "தடுமாறு வரலும்" என்னும் இளம்பூரணர் பாடத்தான் அறிக. |
எ - டு : | கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் |
| நோக்கமிம் மூன்றும் உடைத்து |
(குறள்-1085) |
எனவரும். இம்மூன்றும் உடைத்து என்றதனான் இதுவோ அதுவோ என ஐயவாய்பாட்டான் வரும் வேறுபட வந்த உவமத் தோற்றம் வேறு இதுவேறு என்பது புலனாம். தடுமாறுவமம் என வாளா கூறினமையான். |
| மதியும் மடந்தை முகனும் அறியா |
| பதியிற் கலங்கிய மீன் |
(குறள்-1116) |
என்றாற் போல தடுமாறு கூறலும் கொள்க. |