சூ. 174 : | பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் |
| தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும் |
| இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் |
| இறந்த துணைய கிழவோன் ஆங்கண் |
| கலங்கலும் உரியன் என்மனார் புலவர் |
(31) |
க - து : | தலைமகற்குரியதோ ரியல்பு கூறுகின்றது. |
பொருள் : தன் குலமரபு காரணமாகக் கரணத்தொடு மணந்து கொள்ளப்பெற்ற பின்முறை மனைவியை அம்மரபானே தான் முன்னர் வரைந்து கொண்ட தொன்முறை மனைவி மங்கலப் பொருள்களை ஏந்தி வந்து எதிர் ஏற்றுக்கோடல் நிகழுமாயினும், இனிய கலன்களையணிந்த தன்புதல்வனை வாயிலாகக் கொண்டு அகமனைக்கண் புகுவானாயினும் அந் நிலைமக்கண் தனது குலமரபினையும் காமக்கிழத்தியரைப் பேணவேண்டிய கடப்பாட்டினையும் எண்ணிச் செயலற்றவன் போலத் தலைவன் மனங்கலங்குதற்கும் உரியன் எனக்கூறுவர் புலவர். |