சூ. 178 :புறத்தோர் ஆங்கட் புரைவ தென்ப
  

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
  

பொருள்:  எண்ணரும்  பாசறைக்கண்  ஆடலும் பாடலும்  நிகழ்த்தும்
புறத்தோராய  பரத்தையரொடு சென்று இருத்தல்  பொருத்துவதாகும் எனக்
கூறுவர்  புலவர். அவர்  படை மறவர்  அயர்ச்சி நீங்கப் பாடியும் ஆடியும்
இன்புறுத்தற்கும் வெற்றி பெற்றவிடத்துக் குரவை முதலாய கூத்தியற்றுதற்கும்
உரியராகலின் ‘புரைவதாகும்’ என்றார்.