சூ. 189 : | பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் |
| நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் |
| பரத்தையிற் பிரிந்த காலை யான |
(46) |
க - து : | பரத்தையிற் பிரிவின்கண் தலைமக்கட் காவதொரு முறைமை கூறுகின்றது. |
பொருள் : பரத்தை காரணமாகப் பிரிந்த காலத்தின்கண் தலைவி பூத்தமையறியின் பூப்பின் புறப்பாட்டெல்லையாகிய பன்னிரண்டு நாளினும் தலைமக்கள் தலைவியை விட்டுப்பிரிந்துறைவாரல்லர் எனக் கூறுவர் புலவர். |
இப்பிரிவு பெரிதும் இடையிருவகையோர்க்கண் நிகழும் என்பது பற்றிப் பன்மையாற் கூறினார் என்க. அக்காலம் கரு வயிற்றுறுதற் குரியதாகலின் நீத்தகன்றுறையார் என்ப என்றார். |