சூ. 184 :மொழிஎதிர் மொழிதல் பாங்கற் குரித்தே
(41)
 

க - து : 

இது பாங்கன் கூற்றுநிகழ்த்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள் :தலைவன்  கூறும்மொழிக்கு  எதிர்மொழி கூறுதல்  பாங்கற்
குரியதாகும்.  அஃதாவது வேட்கை காரணமாகத் தலைவன் கூறும்மொழிகள்
அவன் பெருமைக்கு  ஏற்பனவாக  இல்லை  எனக் கருதுமிடத்து அவற்றை
மறுத்துக்  கூறுதல்  பாங்கற்கு  உரியதாகும் என்றவாறு.  எனவே  ஏனைய
வாயில்கள் எதிர்மொழி கூறுதல் புலனெறி வழக்காகாது என்பது பெறப்படும்.
 

எ - டு :

காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகுமென் றாள்மதம் போலப்

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே

(குறு - 136)