சூ. 137 :

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை

(45)
 

க - து :
  

 

களவுக்காலத்துத் தலைவனது   ஒழுகலாறு பற்றியதொரு தன்மை
கூறுகின்றது.
 

பொருள் : களவொழுக்கத்தின்கண்    தனக்குத் தீங்கு   பயப்பனவாக
நிகழும் தனது இராசிக்குரிய பொழுதும், நாள் மீனுக்குரிய பொழுதும் ஆகா
எனக் கூட்டத்தைத் துறந்து ஒழுகும் ஒழுக்கம் தலைமகற்கு இல்லை.
  

ஓரையும்   நாளும்   என வாளா  கூறியிருப்பினும் பின்னர் ஆற்றினது
அருமை    முதலியவற்றை   இதனொடு   மாட்டெறிழுந்து கூறலின் தீங்கு
பயப்பதாகும்.   ஓரையும்   நாளுமாகிய    பொழுதுகள்   இவை  என்பது
தெளியப்படும்.