சூ. 242 :

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தாவின் றுரிய தத்தங் கூற்றே

(46)
 

க - து :

வாயில்கட்குரிய கூற்றுப் பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் : பாணர்  முதலாய  வாயில்கள்  தத்தமக்குரிய  நெறியானே
வாயிலாகக்    கூறும்     கூற்றுக்கள்    வெளிப்படையாகக்    கூறுதற்கு
வருத்தமின்றியுரியதாகும்.
 

அஃதாவது   வாயிலோர்  கூற்றுக்,  கேட்போர்க்கு   வருத்தம்  தரும்
இயல்பினவாயினும்,   குற்றேவல்   மரபினராகலின்   குறிப்பாற்   கூறுதல்
சாலாமையான்   வெளிப்படையாகவே   கூறுவர்   என்பதும்   அக்கூற்று
வருந்துதற்குரியதன்று என்பதும் உணர்த்தியவாறு.
 

எ - டு :

நினக்குயாம் பாணரேம் அல்லேம் எமக்கு

நீயும் குருசிலை யல்லை மாதோ

நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி

ஈரிதழ் உண்கண் உகுத்த

பூசல் கேட்டும் அருளா தோயே

(ஐங்-480)
 

எனவரும். பிறவாயில்களின் கூற்றுக்களையும் இவ்வாறே கண்டு கொள்க.