கரணமொடுபுணர வரைந்துகொள்ளும் வரைவு யாவரும் அறிய வெளிப்பட வரைந்து கோடலும், புணர்ந்துடன் போகிய காலைப் பிறர்க்கு வெளிப்பாடாகாமல் வரைந்து கோடலும் என இருவகைப்படும் என்பதும் இதற்கு உரையாகக் கொள்க. |
எ - டு : | "தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக |
| வேய்புரை மென்றோள் பசலையும் அம்பலும் |
| மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்க |
| சேய்உயர் வெற்பனும் வந்தனன் |
| பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே" |
(கலி-39) |
இது களவு வெளிப்பட்ட பின் வரைவு நிகழ்ந்தமை கூறிற்று. |
| கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து |
| வானின் அருவி ததும்பக் கவினிய |
| நாடன் நயனுடையன் என்பதனான் நீப்பினும் |
| வாடல் மறந்தன தோள் |
(ஐந்-எழு-2) |
இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது. |
| "எம்மனை முந்துறத் தருமோ |
| தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே" |
இது கொண்டுதலைக் கழிந்தவிடத்துக் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம். |