சூ. 191 :வேந்துறு தொழிலே யாண்டின தகமே 
(48)
 

க - து : 

பகைவயிற் பிரிவுக்குரிய கால எல்லை கூறுகின்றது.
 

பொருள் :  வேந்தர்க்கும்   அவரது    ஆணை    பெற்றோர்க்கும்
பொருந்திய,  பகைதணி வினைப்  பிரிவு  ஓர்யாண்டினது அகமாகிய  கால
எல்லையை உடையதாகும். தொழிலே என்னும் ஏகாரம் பிரிநிலை. ஏனையது
இசைநிறை.  துணைவயிற்பிரிவும்  பகைதணி  வினையேயாதலின் இதன்கண்
அடங்கும்.