சூ. 203 : | வண்ணம் பசந்து புலம்புறு காலை |
| உணர்ந்தது போல உறுப்பினைக் கிளவி |
| புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே |
(7) |
க - து : | இது "நோயும் இன்பமும்" என்னும் சூத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்:தலைவி தன்மேனி வனப்புத்திரிந்து தனிப்படர் உறும் காலத்துத் தனது நிலையைத் தனது உறுப்பு ஒவ்வொன்றும் உணர்ந்துள்ளமைபோல அதற்குப் பொருந்திய வகையாற் புனைந்து கூறவும் பெறும். |
எ - டு : | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள் |
[குறள்-1233] |
| நாணில மன்றஎம் கண்ணே நாண்நேர்பு |
| சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்பு அன்ன |
| கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ |
| நுண்ணுறை அழிதுளி தலைஇய |
| தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே |
(குறு-35) |
"புணர்ந்த வகையான்" என்றதனான் அவை செயற்படுவன போலக் கூறலும் கொள்க. |
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் |
தின்னும் அவர்க்காண லுற்று |
(குறள்-1244) |
எனவரும். |