செய்யுளியல் 'தருக்கிய றாழிசை'

101

 
  கடஞ்சூழ் நாடன் 16காளிங்கன்
கதிர்வேல் பாடு மாதங்கி
வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம்
வடிக்க ணீல மலர்தாந்தாம்
தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம்
என்னுந் தன்கைந் தண்ணுமையே'
என்பது அறுசீர்க் கழிநெடிலயான் வந்த ஆசிரியவிருத்தம்.
 
     'கணிகொண் டலர்ந்த' (கா. 13.) என்பது எழுசீர்க் கழி நெடிலடியான் வந்த
ஆசிரிய விருத்தம்.
 
     'மூவடிவி னாலிரண்டு' (கா. 13.) என்பது எண்சீர்க் கழி நெடிலடியான் வந்த
ஆசிரிய விருத்தம்.
     'இடங்கை வெஞ்சிலை' (கா. 13.) என்பது ஒன்பதின்சீர்க் கழி நெடிலடியான் வந்த
ஆசிரிய விருத்தம்.
 
     'கொங்கு தங்கு' (கா. 13.) என்பது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய
விருத்தம்.
 
     பதின்சீரின் மிக்கு வருவனவெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க.
 
  'கழிநெடி லடிநான் கொத்திறின் விருத்தமஃ
தழியா மரபின தகவல தாகும்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 77.)
 
     'மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை.
 
  '[17 கன்று குணில்வா னுறத்தா ழிசையாங் கரைபொருகான்
என்றது வண்டுளர் பூந்தா ரிரங்கு குயின்முழவாக்
கொன்றார்ந் தமைந்த வகவற் றுறைகுறை யாவிருத்தம்
18பின்றாழ் குழலி 19விடங்கணி மூவடி வாதியவே.'
 
     இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே ஆசிரியப்பாவினங் கட்குக் காட்டிய
இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]

(9)


     (பி - ம்.) 16. காளிம்பன். 17. கன்றொடு வானுறத் தாழிசையாகுங், கன்று
குணிலாத்தாழிசை யாகும் 18. முன்றாழ். 19. விடஞ்சூழ் கணிகொண்ட மூவடிவே.
 

----