'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' எ - து. ஒற்றுக்கள் அள பெழுந்தால் நேரசையாம் எ-று. |
| 'ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி வேறல கெய்தும் விதியின வாகும்' |
என்றார் காக்கை பாடினியார். |
| ஒற்றுக்கள் அளபெழாவழி அலகுகாரியம் பெறா என்பதாம். 'தனிநிலை யொற்றிவை தாமல கிலவே யளபெடை யல்லாக் காலை யான' |
(யா. வி. சூ. 3) |
என்றார் ஆகலின். |
| 'கார்க்கட னீர்த்திரையாய்க் கன்னற்கே கார்வடிவப் போர்க்களிறு வாளிதொட்ட போது.' |
இதனுள் ஈரொற்று உடனிலையாய் நிற்பினுங் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறாவெனக் கொள்க. என்னை? |
| 'ஈரொற் றாயினு மூவொற் றாயினும் ஓரொற் றியல வென்மனார் புலவர்' |
என்றார் ஆகலின். |
| (9) ['கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும். |
(மலைபடு. 352.) |
| 'கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு. '(10) எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு.' |
இவற்றுள் ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து ஓரலகு பெற்றவாறு கண்டு கொள்க. |
| [ 'இருவகை மருங்கினு மெய்யள பெழினே நிரைநேர் நேர்நே ராகுத லன்றி நிரைநிரை நேர்நிரை யாகுத லிலவே'] |
'வாரும் வடமுந் திகழு முகிண் முலை வாணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை. |
(1) |
|
(9) கண் தண் எனக் கண்டும். (10) எஃகு - வேல்; ஆயுதப் பொது. வெஃகுதல் - ஆசைப் படுதல். |