வரலாறு |
ஆசிரியப்பா |
| 'கயலே ருண்கண் கலுழ நாளுஞ் சுடர்புரை திருநுதல் பசலை 13பாயத் திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப் போகல் 14வாழி யைய பூத்த கொழுங்கொடி 15யணிமலர் தயங்கப் பெருந்தண் 16வாடை வரூஉம் பொழுதே,' |
இஃது எல்லாவடியும் முதற்கண்ணே வல்லெழுத்து வந்தமை யால் வல்லின மோனை. இது கையனார் காட்டிய பாட்டு. மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க. |
| 'வருக்க நெடிலினம் வரையா ராண்டே நெடிய பிறவு மினத்தினு மாகும்' |
என்றாரும் உளர் எனக் கொள்க. |
'வருக்கம் நெடில் இனம் வந்தால் எதுகையும் மோனையும் என்று உரைக்கப்படும்' என்னாது 'ஒருக்கப் பெயரான்' என்று சிறப்பித்த வதனால் ஒருசாராசிரியர் தலையாகு எதுகை இடையாகு எதுகை கடையாகு எதுகை என்றும், தலையாகு மோனை இடையாகு மோனை கடையாகு மோனை என்றும் வேண்டுவாரும் உளர் எனக் கொள்க. என்னை? |
| 'சீர்முழு தொன்றிற் றலையா கெதுகை யோரெழுத் தொன்றி னிடைகடை பிறவே. |
என்றார் ஆகலின். மோனைக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. |
வரலாறு |
| 'சிலைவிலங்கு நீள்புருவம்' |
(கா. 11. மேற்.) |
என்னும் பாட்டு (4) சீர்முழுதொன்றி வந்தமையால் தலையா கெதுகை. |
|
(4) சீர்முழுதும் ஒன்றிவரலாவது : ஒரு சீரின்கண் முதலெழுத் தொழிந்த மற்றையவை எல்லாம் ஒன்றிவருவது. |
|
(பி - ம்.) 13. பாயா திருந்திழை. 14. வாழியரைய. 15. யளிமலர். 16. வாடையொடு வரூஉம். |