இனி, ஒழிந்த 'மருள்தீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசை வனப்புப் பொருள்கோள் குறிப்பிசை ஒப்பும் குறிக்கொள்' எ - து, மேல் 'எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன்' என்று அதிகாரம் பாரித்த காரிகையுள் (கா. 1.) எடுத்து ஓதப்படாத யாப்புறுப்பாய் மயக்கம் நீக்க வகுக்கப்பட்ட (1) விகாரமும், (2) வகையுளியும், (3) வாழ்த்தும், (4) வசையும், (5) வனப்பும்,(6) பொருளும், (7) பொருள் கோளும், (8) குறிப்பிசையும், (9) செய்யுளொப்புமையும் ஆமாறு உபதேச முறைமையால் உணர்க எ - று. 'பொலங் கொடியே எ - து மகடூஉ முன்னிலை. |