| 'நீலுண் டுகிலிகை கடுப்ப.' |
இதனுள் 'நீலமுண்ட (9) துகிலிகை' எனற்பாலதனை 'நீலுண் துகிலிகை' என்று கடைக்குறைத்து வழங்கினவாறு. பிறவும் அன்ன. |
(2) வகையுளி |
(10) வகையுளி என்பது முன்னும் பின்னும், அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி யறிந்து குற்றப்படாமல் வண்ண மறுத்தல். என்னை? |
| 'அருணோக்கு நீரா ரசைசீ ரடிக்கட் பொருணோக்கா தோசையே 15போற்றி - 16மருணீக்கிக் கூம்பவுங் கூம்பா தலரவுங் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
| 'கடியார்பூங் கோதை கடாயினான் றிண்டேர் 17 சிறியாடன் சிற்றில் சிதைத்து.' |
இதனுட் 'கடியார்' என்றும், 'பூங்கோதை' என்றும் புளிமா வாகவும் தேமாங்காயாகவும் 'கடாயினான்' என்று கருவிளமாகவும் இவ்வா றலகிடின் ஆசிரியத் தளையும் கலித்தளையும் தட்டு, 'வெள்ளைத் தன்மை குன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை' (கா. 38) என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலால் இதனைக் 'கடியார்பூம்' என்று புளிமாங்காயாகவும் கோதையென்று தேமாவாகவும் அலகிடச் சீரும் தளையும் வண்ணமும் சிதையாவாம். |
| 'மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்' |
(குறள், 4.) |
இதனுள் 'நீடு' என்றும் 'வாழ்வார்' என்றும் அலகிட ஆசிரியத் தளை தட்டு வெண்பாவின் இறுதிக்கண் 'வார்' என்று அசைச்சீர் |
|
(9) துகிலிகை - எழுது கோல் ; சீவக. 1107. (10) சிதைந்தசொல் சீராக வருவது வகையுளி. |
|
(பி - ம்.) 15. நோக்கி. 16. மருணீங்கக். 17. சிறியார்தம். |