ஆசிரியவிருத்தம் |
| (5) கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு கமழ்கின்ற காந்த ளிதழாலஅணிகொண் டலர்ந்த வனமாலை சூடி யகிலாவி குஞ்சி கமழ மணிகுண்ட லங்க ளிருபாலும் வந்து வரையாக மீது திவளத் துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவானி தென்கொறுணிவே.' |
(சூளா. அரசியற். 197) |
இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். |
ஆசிரியவிருத்தம் |
| '(6) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாண முழுதுலக மூடியெழின் முளைவயிர 4நாற்றித் தூவடிவி னாவிலங்கு வெண்குடையி னீழற் சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால் சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச் சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து புலங்கொளா 5வாலெமக்குப் புண்ணயர்தங் கோவே.' |
(சூளா. துறவு. 64.) |
இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். |
ஆசிரியவிருத்தம் |
| (7) இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தானையை யிலங்கு மாழியின் விலங்கியோள் 6 முடங்கல் வாலுளை மடங்கன் மீமிசை முளிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் |
|
(5) கணி - சோதிடம் : கார்ப்பருவத்தின் வருகையை அறிவிக்க இது மலர்வதனால் 'கணிகொண் டலர்ந்த வேங்கை' என்றார்; 'இளவேங்கை நாளுரைப்ப' ('திணைமாலை நூற். 20). வனமாலை - அழகிய மாலை. (6) மூன்று வடிவினவாகிய குடை என்க. 'சுடரோய்' என்றது அருகபனை. புலம்கொளா - இவ்விஷயங்கள் எங்கள் அறிவுக்கு எட்டவில்லை. (7) மடங்கல் - சிங்கம். முருக்கியோள் - அழித்தவள். |
|
(பி - ம்.) 4. நாறித். 5. வாலெமக்கெம். 6. முடங்குவாலுளை |