76

யாப்பருங்கலக் காரிகை

 
(2) 'துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.'

(நாலடி. 2.)
 

     இவை நான்கடியாய்த் தனிச்சொலின்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை
வெண்பா.
 
(3) 'கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா வுடையா னுடைக்கிற்குந் 3தோமில்
தவக்குட்டந் தன்னுடையா னீந்து மவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.' )

(நான்மணி. 18)
 


(4) ' இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் றீயவை யொல்லும் வகையான்
மருவுமின் மாண்டா ரறம்.'
 

(நாலடி. 36)
 

     இவை நான்கடியாய்த் தனிச்சொலின்றிப் பல விகற்பத்தால் வந்த இன்னிசை
வெண்பா,ஒன்றல்ல வெல்லாம் பல என்பது தமிழ் நடையாகலின். என்னை?
 

  'ஒன்றல் லவைபல தமிழ்நடை வடநூல்
இரண்டல் லவைபல வென்றிசி னோரே'
 
என்றார் ஆகலின்.
 
     'ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் கனிச்சொல் இன்றி நடப்பின் அஃது
இன்னிசை' என்னாது 'துன்னும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இரண்டாமடியின்
இறுதி தனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்தால் வருவனவும், மூன்றா மடியின் இறுதி
தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவனவும், அடிதோறும் ஒரூஉத்தொடை
பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவன
 

     (2) துகள்தீர் - குற்றம்தீர்ந்த, பகடு நடந்த கூழ் - உழவுத்தொழிலாலே வந்த
சோறு. அகடு உற - சாயாது ஒருபடிப்பட. 'சகடக்கால் போல' என்பது மேல்கீழாய்
வருதல்.

      (3) கலவர். மரக்கலங்களை யுடையவர். பாய்மா - குதிரை.

      (4) ஒருவுமின் - நீங்குமின். மாண்டார் - மாட்சிமைப்பட்டவர்கள்.
 

     (பி - ம்.) 3. தேரில்.