உதாரண முதனினைப்பு |
| 'வைக றுகடீர் கடற்குட்ட மின்றுகொ லன்றுமங்கண் எய்து மலிதேர் வளம்பட வேமழை யின்னிசையாம் வையக மெல்லாம் பலவிகற் பேற்றது சேற்றுடனே பையர வல்குல்பன் மாடம் பஃறொடைப் பல்விகற்பே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முறைப்படியே இன்னிசை வெண்பாவிற்கும் பஃறொடை வெண்பாவிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க. |
(4) |
- - - |
சிந்தியல் வெண்பா, வெண்பாவின் ஈற்றடி |
| 25. நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில் வெள்ளைக் கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே. |
இ - கை. நேரிசைச் சிந்தியல் வெண்பாவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவு மாமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறு முணர்த்....று. |
'நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்தியல் ஆகும்' எ - து. நேரிசை வெண் பாவேபோல இரண்டாமடி யிறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் மூன்றடியால் வருவன வெல்லாம் நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று. இன்னிசை வெண்பாவே போலத் தனிச்சொல்லின்றி ஒரு விகற்பாகியும் பல விகற்பாகியும் மூன்றடியால் வருவனவெல்லாம் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று, என்னை? |
| 'நேரிசைச் சிந்து மின்னிசைச் சிந்துமென் றீரடி முக்கா லிருவகைப் படுமே' |
என்றார் பிறருமெனக் கொள்க. |