செய்யுளியல் 'தருக்கிய றாழிசை'

97

 

ஆசிரியப்பாவின் இனம்

29. தருக்கிய றாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய்
எருத்தடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே
சுருக்கடி யாயுந் துறையாங் குறைவிறொல் சீரகவல்
விருத்தங் கழிநெடி னான்கொத் திறுவது மெல்லியலே.
 

      இ - கை. ஆசிரியத்தாழிசையும் ஆசிரியத்துறையும் ஆசிரிய விருத்தமு மாமாறுணர்த்.....று.
 
     (1) 'தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன' எ - து. மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத்தாழிசையாம் எ - று.
 
     'தருக்கிய றாழிசை' என்று சிறப்பித்தவதனால் ஒருபொ ருண்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைய, தனியே வரப்பெறு மாயினும் எனக் கொள்க.
 
'மூன்றடி யொத்த முடிவின வாய்விடின்
ஆன்ற வகவற் றாழிசை யாகும்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 75.)
 
  ['ஒத்த வொருபொருண் மூவடி முடியினஃ
தொத்த ழிசையா முடன்மூன் றடுக்கின்'
 
என்றார் மயேச்சுரர்.]
 

வரலாறு

' (2) கன்று குணிலாக் 1கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தொழீ.

' பாம்பு கயிறாக் கடல்கடைந்த 2 மாயவன்
ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ.'
 

     (1) தருக்கு இயல் தாழிசை - ஓசை இனிமை முதலிய நோக்கிப் பயில்வோர்
தருக்குவதற்குக் காரணமான தாழிசை.

      (2) குணில் - குறுந்தடி. நம் ஆனுள் - நம்முடைய பசுக்கூட்டத்தினிடம், எல்லி - பகல். கொன்றை, ஆம்பல், முல்லை என்பன சில கருவி.
 

     (பி - ம்.) 1. கனியெறிந்த மாமாயன், கனியுகுத்த. 2. மாமாயன்.