செய்யுளியல் 'தருக்கிய றாழிசை'

99

 
  '(6) கரைபொரு 5கானியாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவி ராயீன்
அரையிருள் யாமத் தடுபுலியே றஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.'
 
     இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.
 
     '(7) 6வண்டுளர் பூந்தார் 7வளங்கெழு செம்பூட்சேஎய் வடிவே போலத்8,
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோர் யாரே9, தண்டளிர்ப்
பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப்பாங்கு 10படமொழிந்து
படர்ந்தோ னன்றே,'
 
     இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.
 
'(8) கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழினிறக்
குருதிக் கோட்டன விருந்தடப் பெருங்கைக்
குன்றாமென வன்றாமெனக்
குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்

11 வென்றாங் கமைந்த விளங்கொளி யிளம்பிறைத்
துளங்குவா ளிலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தாள்
அதிரும் வானென வெதிருங் 12கூற்றெனச்
சுழலா நின்றன சுழிகண் யாளி

சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப்
பொறியெருத் துறுவலிப் பலவுநா றழல்வாய்ப்
 

     (6) கல் அதர் - மலைவழி. எம் உள்ளி - எம்மை நினைத்து. வரையா மங்கையர்
- மலையில் வாழும் தெய்வ மங்கையர்.

      (7) சேஎய் - முருகக் கடவுள். பிண்டித் தழை - அசோக மரத்தினது இலைகளால்
ஆன ஓர் உடை விசேடம். மா வினவி - தான் தேடி வந்த விலங்கு அப்பக்கம் வந்ததா
என்று கேட்டு தணத்தல் - நீங்குதல். தலைவியும் தோழியும் உரையாடல் இது.

      (8) குருமுகம் ஒளி பொருந்திய முகம். பிறை எயிற்று அழல் உளைப் பரூஉத்
தாள் யாளி. வான் - மேகம். ஆர்ந்து - நிறைந்து. நுதி - கூர்மை. பொறி எருத்து -
புள்ளிகள் பொருந்திய பிடரி. புலிமான் ஏற்றை - ஆண்புலி. இறுவரை - பெருமலை.
எறிகுறும்பு - கொள்ளை மிகுந்த பாலை நிலத்தூர். நோனார் - ஆற்றாதார் - கரவு -
பிறரறியாமல் மறைந்துவரும் தொழில்.
 

     (பி - ம்.) 5. கான்யாற்றங்....வருதி. 6. வண்டுளரும். 7. வரிவளைக்கைச் செம். 8, 9.
தண்டளிர்ப்பூம், 10. படநடந்து, 11. வென்றார்ந்தமைந்த. 12. கான்றெனக்.