1. வெட்சி

வெட்சியென்பது இருவகைத்து; 1மன்னுறு தொழிலும் தன்னுறு தொழிலுமென.

வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கன்முனை யாதந் தன்று.

(இ - ள்.) வெற்றியினையுடைய அரசன் ஏவவும் ஏவலின்றியும் போய்ாறுபாட்டினையுடைய வேற்றுப்புலத்துப் பசுநிரையைக் கைக்கொண்டது. எ-று


1 " தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் , றன்ன விருவகைத்தே வெட்சி " (பன்னிரு.); இ. - வி. சூ. 602, மேற்.