தொழில்காவன் மலிந்தியலும் பொழில்காவலன் புகழ்விளம்பின்று. (இ - ள்.) காவற்செய்தி மிக்குநடக்கும் பூமிகாவலன்றன் கீர்த்தியைச் சொல்லியது எ-று. (வ - று.) ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மவன்க ணகலாவால்-வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற் ககப்படா வில்லை யரண். (இ - ள்.) மனவெழுச்சியும் மாறுபாட்டின் பெருமையும் பொருந்திய நல்ல விசாரமும் செல்வப் பெருக்கமும் அவனிடத்து நீங்காவால்; பெருமையினையும் பிறரால் இகழத்தகாத வெற்றியினையும், நன்மை மலியும் மாலையினையும் உடையவனுக்குக் கையகப்படாதன இல்லை, காவற்குறும்புகள் யாவையும் எ-று. (6) |