மாவுடைத்தார் மணிவண்ணன் சோவுடைத்த மறநுவலின்று (இ - ள்.) வண்டினையுடைய மாலையாற் சிறந்த நீலமணிபோன்ற மேனியையுடையான் வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது எ-று. (வ - று.) 2அன்றெறிந் தானு மிவனா லரண்வலித் தின்றிவன் மாறா வெதிர்வார்யார்-என்றும் மடையார் மணிப்பூ ணடையாதார் மார்பிற் சுடராழி நின்றெரியச் சோ. (இ - ள்.) அந்நாள் அழித்தவனும் இவன்,அரண்வலிதென்றுதேறி; இந்நாள் இவன்பகையாக எதிர்ப்பார் யார் எக்காலத்தும் ?மூட்டார்ந்த மணியணியையுடைய பொருந்தாதாருடைய அகலத்து ஒளிவிடுந் திகிரி நின்று அழலச் சோவென்னும் அரணத்தை எ-று. இஃது உவமையன்று; மிகுதி கூறியது. (7)
1. கந்தழி : தொல். புறத். சூ 33. 2. தொல். புறத். சூ. 27. இளம். மேற். |