102. முற்றுழிஞை
ஆடிய லவிர்சடையான்
சூடியபூச் சிறப்புடைத்தன்று.

(இ - ள்.) அசையுந் தன்மையினை உடைத்தாய் விளங்கும் வேணியையுடையான் மலைந்த பூவினது நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
இயங்கரண மூன்று மெரித்தான் -தயங்கிணர்ப்
பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானும்
மாக்கொ ளுழிஞை மலைந்து.

(இ - ள்.) மருளாத உழிஞையின் மிகுதியை வேறுணர்வார் யாவர் தாம். திரிபுரங்கள் மூன்றையும் சுட்டான்; விளங்கும் கொத்திற் பொலிவுகொண்ட கொன்றையையுடைய புரிந்த செஞ்சடையானும் பெருமைகொண்ட உழிஞையைச் சூடி எ-று.

(8)