வளைஞரல வயிரார்ப்ப மிளைகடத்தலு மத்துறையாகும். (இ - ள்.) சங்கம் முழங்கக் கொம்பு குறிப்பக் காவற்காட்டைக் கடந்து புகுமதுவும் முன்னஞ்சொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) அந்தரந் தோயு வமையோங் கருமிளை மைந்தர் மறிய மறங்கடந்து -பைந்தார் விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார் வரைமார்பின் வைகின வாள். (இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் மூங்கிலுயர்ந்த அரிய காவற் காட்டிற் பொரும் வீரர் முதுகிட மறத்தை வென்று செவ்விமாலை மணத்தையுடைய அகலத்திலே வின்னாணொலிப்ப வெவ்விய அம்பைச் சிந்துவாருடைய மலைபோன்ற அகலங்களிலே தங்கின, உழிஞை யாருடைய வாள்கள் எ-று. தூவுவாரென்பது தூவாரென இடைக்குறைந்தது. (14) |