அருஞ்சுரத்து மகன்கானத்தும் வருந்தாம னிரையுய்த்தன்று . (இ - ள்.) அரிய வழியிடத்தும் பரந்த காட்டின்கண்ணும் நோவுபடாதபடி பசுநிரையைச் செலுத்தியது எ-று. (வ - று.) 1புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசைஇயகை வெல்கழலான் - 2தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை. (இ - ள்.) புல்லை மேய்ந்து இளைப்பாறி இனத்துடன் கூடித் தம்மில் ஒக்கப்போவனவாகவென்று சொல்லாநின்றான், வில்லின்மேல் வைத்த கையினையும் வெல்லும் வீரக் கழலினையுடையவன்; தன்மேலே செந்தூக்கான மலையினின்றும் விழாநின்ற நீர்போல் முடுகிவருங்கரந்தையாரைக் கண்டும், நீண்ட வரையினது நீழலிலே ஆனிரையை எ - று. ஆனிரையைப் புணர்ந்துடன் செல்கென்னுமெனக் கூட்டுக. (11)
1. தொல். புறத். சூ. 3, இளம். ந. மேற். 2. நன். சூ. 301, மயிலை. விரு. மேற் . |