111. பாசிநிலை
அடங்காதார் மிடல்சாயக்
1கிடங்கிடைப் போர்மலைந்தன்று.

(இ - ள்.) பகைவருடைய வலி கெட அகழியிடத்துப் பூசலை மேற் கொண்டது எ-று.

(வ - று.)
2நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி யுடலவும்-பூவார்
அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்.

(இ - ள்.) ஓடமும் 3ஒருமரத்தோணியும் மேல்கொண்டு பொருந்தாதார் ஒழியாராய் விலங்கி வெகுளவும் மலர்நிறையும் கிடங்கிலே மிக்கோடும் அழகிய சோரியளற்று அம்பின் வாயிலே பட்டார் அநேகர் எ-று.

(17)

1. கிடங்கினுட் 2. தொல். புறத். சூ. 11, இளம். மேற். 3. பெரும்பாண். 433