உடல்சினத்தார் கடியரணம் மிடல்சாய மேலிவர்ந்தன்று. (இ - ள்.) முனையும் செற்றத்தினையுடையார் காவற்குறும்பு வலிகெட ஏணிமேல் ஏறியது எ-று. (வ - று.) 1சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார் கடுமுர ணெஃகங் கழிய -அடுமுரண் ஆறினா ரன்றி யரவு முடும்பும்போல் ஏறினா ரேணி பலர். (இ - ள்.) செங்கலாற் செய்த நெடிய புரிசையைச் சூழ்ந்து நீங்காராய்க் கொடிய மாறுபாட்டினையுடைய வேல் மார்பிலேபட்டு உருவிப் போகக் கொல்லும் மாறுபாடு ஆறினாரொழியப் பாம்பும் உடம்பு மொப்ப ஏணிமேல் ஏறினார் அநேகர் எ-று. அடுமுரணாறினார்-பட்டார்; முரணாறினாரன்றி என்பதற்கு முரணாறாதென்றுமாம். (19)
1. தொல். புறத். சூ. 11, இளம். மேற்: சுடுமண்: பெருண்பாண். 405; சிலப். 14: 146 மணி. 3: 127 |