அகத்தோன் காலை யதிர்முர சியம்பப் புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத் தன்று (இ - ள்.) மதிலின் உள்ளோனுடைய முழங்குமுரசு. காலையில் ஒலிப்பப் புறத்திருந்த உழிஞையானது வெய்ய கோபத்தின் மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1காலை முரச மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல்வெய்யோ னோக்குதலும் -மாலை 2அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு. (இ - ள்.) நாட்காலையே முரசு அரணின்கண் ஒலிப்பக் கண்சிவந்து வேலை வெற்றியைவேண்டுவோன் பார்த்தானாக, மாலைப்பொழுது அடுவேம் சோறென்று சொல்லி அவ்வரணினுக்குள்ளே எறிந்தார் கட்டுங்கழலினையுடையார், மூழையினையும் துடுப்பினையும் எ-று. அம்மதிலுள் இட்டார், இதனை அழித்து இன்றுபோய் உண்பே மென்று. (23)
1. தொல் புறத். சூ.11, இளம். மேற். காலைமுரசும்: சிலப்.14:14; பதிற். 58:5-7 2. புறநா,304:7-8. |