12. தலைத்தோற்றம்
உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று.

(இ - ள்.) வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மனமகிழ்ந்தது எ-று.

(வ - று.)
1மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லும்
மையணற் காளை மகிழ்துடி - 2கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
உய்த்தன் றுவகை யொருங்கு.

(இ - ள்.) செறிந்த அலை தாடியையுடைய பசுநிரை முன்னேபோகப் பின்னே வரும் மயிராற் கறுத்த கபோலத்தினையுடைய காளை மகிழ்ந்து கொட்டுந்துடி நிரைகொண்டுவரப் போன வெட்சியாருடைய நிலைமையை அறியாது வெறுப்பினாற் கையைக் கதுப்பிலேவைத்த வேட்டு விச்சியர் வாள் போன்ற கண் இடந்துடிப்பச் செலுத்திற்று, பிரியத்தை, பலர்க்கு மொக்க எ - று.

மகிழ்துடி ஒருங்கு உய்த்தன்றென்க. மகிழ்துடி : வினைத்தொகை.

(12)

1. தொல். புறத். சூ. 3, ந. மேற்.
2. சீவக. 2050.