எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித் துண்ணா வரகொடு கொள்வித் தின்று. (இ - ள்.) பகைவருடைய பலஅரணும் கழுதையாகிய ஏரிட்டுழுது கவடியுடன் குடைவேலை விதைத்தது எ-று. (வ - று.) எழுதெழின் மாடத் திடனெலா நூறிக் 1கழுதையேர் கையொளிர்வேல் கோலா-உழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற் கள்விரவு தாரான் கதம். (இ - ள்.) 1சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது அதற்குப் பின்பு கவடியும் குடைவேலும் வித்தினும் கெடாதால்; தேன் கலந்த மாலையினையுடைவன் கோபம் எ-று. (26)
1. தொல், புறத் . சூ. 13, ந; புறநா. 15:-23, 392: 9-11: சிலப் 27: 55-6; காஞ்சிப் . நாடு. 28 2. "மாடக்குச் சித்திரமும்" (பழைய செய்யுள்.) |