புண்ணிய நீரிற் புறையோ ரேத்த மண்ணிய வாளின் மறங்கிளந்த தன்று. (இ - ள்.) உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்தநீராலே மஞ்சனமாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லியது எ-று. (வ - று.) 1தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்தும் 2இடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான் புடையா ரறையப் புகழ். (இ - ள்.) தீர்த்தநீரும் மலரும் சொரிந்து திக்குவிளங்கக் கூரிய வாளினை மஞ்சனமாட்டிப் பதாகையாற் சிறந்த தேரினையுடையான் இரண்டாவதும் உருமேற்றையொக்கும் வீரமுரசு ஆர்ப்ப இந்த அரணிடத்தே களவேள்வி வேட்டான், பக்கத்துள்ள மன்னரெல்லாம் தன் கீர்த்தியைச் சொல்ல எ-று. (27)
1. தொல் . புறத். சூ.11, இளம். மேற் 2. முருகு. 121; குறுந். 270: 1-3; பரி. 4:19,22:4; அகநா. 188:1-3, 354:2; புறநா.350:4; சீவக. 2900 |