1வணங்காதார் மதிற்குமரியொடு மணங்கூடிய மலிபுரைத்தன்று. (இ - ள்.) பணியாதார் அரணாகிய கன்னியுடன் வதுவைபொருந்திய மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 2எங்கண் மலர வெயிற்குமரி கூடிய மங்கல நாள்யா மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி. (இ - ள்.) எம்முடைய கண் மலர அரணாகிய கன்னியினை மணந்த மணநாளிலே யாம் மகிழ்ச்சியெய்த மதுவலரும் கோவைமாலையினையும் கையாற்செய்யப்பட்டு ஒளிசிறந்த ஆபரணத்தினையுமுடைய வேந்தன் தாள் நிழற்கீழே தங்கின; செறிந்த சோதியால் நிறைந்த அணிகலத்தை யுடைய அரசர் முடிகள் எ-று. (28)
1. பு.-வெ. 107. 2. தொல் . புறத். சூ.11, இளம். மேற |