பேணாதார் மறங்கால ஆணைகொண் டடிப்படவிருந்தன்று. (இ - ள்.) பகைவர்தாம் சினத்தை உமிழத் தன் ஆணையை ஏற்றுக் கொண்டு நாடு வழிப்பட நெடுங்காலம் இருந்த இருப்பிலே இருந்தது எ-று. (வ - று.) ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப 1வென்றி விளையா விழுமதிலோர்-என்றும் பருந்தார் செருமலையப் பாடி பெயரா திருந்தா னிகன்மறவ ரேறு. (இ - ள்.) பொருந்திய பகைவர்தேசம் ஒருவழிப்பட்டு ஏவல்கேட்பத் தங்கள் வெற்றியைத் தங்கள் பக்கல் உண்டாக்கமாட்டாத சீரிய அரணிடத்தோர் எந்நாளும் பருந்துநிறையும் பூசலைச் செய்யாநிற்பப் பாசறையை விட்டு நீங்காது அவ்விருப்பிலேயே யிருந்தான், மாறுபாட்டாற் சிறந்த வீரருக்கு இடியேறனையான் எ-று. (31)
1. நன். சூ.451, மயிலை. மேற். |