பொன்புனைந்த கழலடியோன் தன்படையைத் தலையளித்தன்று. (இ - ள்.) அழகணிந்த வீரக்கழற்காலினையுடையான் தனது சேனையைத் தலையளி பண்ணியது எ-று. (வ - று.) 1வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு . (இ - ள்.) போர்வெல்லும் அடையாளமும் 2பற்றும் சிறந்ததனமும் மருத நிலமும் கொல்லும் யானையும் குதிரையும் வழங்கி அருள்செய்தான்;பல பரியினையும் நல்ல மணிமிடைந்த திண்ணிய தேரினையுமுடைய பகைஞர் அஞ்சித் தலைநடுங்க , நவமணி அழுத்தின ஆபரணத்தினையுடையான், சேனைக்கு எ-று. (2)
1. குறள். 762, பரிமேல். வி. 2. பற்று - பல ஊர்களையுடைய சிறுநாடு. |