தாம்படைத் தலைக்கொள்ளாமை ஓம்படுத்த வுயர்புகூறின்று. (இ - ள்.) பொர எதிர்ந்த இருவகைச்சேனை தாம் பொருதுமடியாமை பரிகரித்த ஆற்றலினது உயர்ச்சியைச் சொல்லியது எ-று. (வ - று.) கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள் இழுதார்வேற் றானை யிகலிற் - பழுதாம் செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம் உயிர்காவ லென்னு முரை. (இ - ள்.) பேய்மிக்க போர்க்களத்தைக் கிட்டித் தம்மில் தாம் நெய்யணிந்த வேற்படை மாறுபடிற் குற்றமாம்; குற்றத்தை உலகிற் புகுதாமற் காத்து நடக்கும் நீதியையுடைய மன்னர்தம் செல்வமாவது பல உயிரையும் காத்தலென்றறிந்து சொல்லும் சொல் எ-று. உரை பழுதாம். இகலின் இருவரரசர்சேனையும் தோலாது மடியும். இனி ஒருவன்சேனை தம்முள் மாறுபடுதலென்றுமாம். (3) |