பூம்பொழிற் புறங்காவலனை ஓம்படுத்தற்கு முரித்தெனமொழிப. (இ - ள்.) பொலிவுபெற்ற பூமிகாவலற்கு உறுதி கூறுதற்கும் பெறும் அதுவென்று சொல்லுவர் எ-று. (வ - று.) வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும் செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - உயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க் குலகழியு மோர்த்துச் செயின். (இ - ள்.) கொம்போசையின் மேற்படச் சங்கு முழங்கக் கூர்த்த வேலும் வாளும் போரிடத்து நெருப்புப்பரப்ப வெகுண்டு உயிரிடத்துக் கொலைக் குற்றம் பலகழியுமாயினும் செலவையயர்ந்த குதிரையாற் பூட்டப்பட்ட தேர் வேந்தர்க்கு விசாரித்துச்செய்யின் பூமியழியும் எ-று. படைபடும், கெடுமென்று ஓராது பூசல் செய்யவேண்டும். (4) |