135. இதுவுமது
ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
செருவிடைத் தமியன் றாங்கற்கு முரித்தே.

(இ - ள்.) ஒரு குடைவேந்தனைக் குடைவேந்தர் பலர் அடையப்போரிடத்துத் தனிவீரன் தானே தடுத்தற்குமுரித்து அத்துறை எ-று.

(வ - று.)
காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை 1வேல்பட வீழ்ந்தனவே - தோலா
இலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
மலைபுரை யானை மறிந்து .

(இ - ள்.) காற்றால் நிலைகுலைந்து ஆதித்தனை மறைத்த கருமுகில் போல , வேல்வீரன் கையகத்து வேல்படுதலால் வீழ்ந்தன; தோலாத இலையாற்றொடுத்த குளிர்ந்த மாலையினையுடைய அரசன்மேற் சென்ற

1மலையையொத்த ஆனை கீழ்மேலாய் எ-று.

வந்தவென்பது இடவழுவமைதி

கார்முகில்போற் சென்ற யானையென்க.

(9)

1. வேல்விட 2. மலையையொத்த அயிராபதம்