138. இருவருந் தபுநிலை
பொருபடை களத்தவிய
இருவேந்தரு மிகலவிந்தன்று.

(இ - ள்.) போர்செய்யும் சேனையிரண்டும் களத்திற்பட இருவர் அரசரும் மாறுபாட்டாற் பட்டது எ-று.

(வ - று.)
1காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி
வேந்த ரிருவரும் விண்படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையு நீங்கா விகல் .

(இ - ள்.) கனன்று கடிய யானை கண்ணழலக் கண்ணுற்று அரசரிருவரும் விண்ணைச்சேர எடுக்கும் போர்செய்யும்படை ஒளிவிட வென்னிடாவாகி வெகுண்டு இரண்டுசேனையும் ஒழியாவாயின , மாறுபாட்டை எ-று.

அரசும் படையும் மடிந்தவாம்.

(12)


1. தொல். புறத். சூ. 14, இளம். மேற்.