1வெயர்பொடிப்பச் சினங்கடைஇப் பெயர்படைக்குப் பின்னின்றன்று. (இ - ள்.) வேரரும்பச் சினத்தைக் கடாவி முதுகிட்ட தன் சேனைக்குப் பின்னே நின்றது எ-று. (வ - று.) கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளந் தன்மேல் வர . (இ - ள்.) தறுகண்வீரன் நெருப்புப்போல் விழித்துக் கோபித்து நெடிய கையையுடைய யானைப்பிணத்தின் நடுவே நின்றான்; கண்டார் நடுங்கும் போரிடத்துக் காலாள் வெள்ளம் இரிந்தோடவும் போகானாகித் தன் கைவேலை ஊன்றி, பகைவர் வாட்படைவெள்ளம் தன்மேலே அடர்ந்துவர எ-று. (13)
1. "மெய்யது வியரே" (புறநா. 100-2) |