140. ஏம வெருமை
குடைமயங்கிய வாளமருட்
படைமயங்கப் பாழிகொண்டன்று.

(இ - ள்.) மன்னர்குடைகள் தம்மில் தலைமயங்கிய வாட்பொருள் தான் எறிந்தவேல் பொருகளிற்றின் மத்தகத்துக் குளிப்பத் தோள் வலியால் வெற்றிகொண்டது எ-று.

(வ - று.)
மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச்
செருப்புகன்று செங்கண் மறவன் - நெருப்பிமையாக்
1கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு.

(இ - ள்.) தோளே கொம்பாக மதர்த்த எருமையேறு போல வெகுண்டு போரைவிரும்பிச் சிவந்த கண்ணினையுடைய மறவன், பொறிபிறப்ப விழித்துக் கையிலேந்திய வேலைக் கடிய யானைமேல்விட்டு முன்பு வென்றி கொண்டவாறு போல நிராயுதனாகி நின்று மெய்வலியாற் பின்னரும் வென்றிகொண்டான்; மேல்வரும் படையை விலக்கி எ-று.

23"படையறுத்துப் பாழிகொள்ளுமேமம்" என்றாராசிரியர்.

(14)

1. புறநா. 274 " 3; குறள். 774.
2. தொல். புறத். சூ. 17.
3. படைமறுத்து