கழல்வேந்தர் படைவிலங்கி அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று. (இ - ள்.) வீரக்கழன்மன்னர் சேனையைக்கொன்று அழலும்வேலைத் திரித்து ஆடுதலை விரும்பியது எ-று. (வ - று.) ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர் சூடன் 1மலைந்த சுழல்கட்பேய் - மீடல் மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் 2மார்பம் திறந்தவேற் கையிற் றிரித்து. (இ - ள்.) ஆடுதலை மேற்கொண்டான் போரை விரும்பினோன்; வீழ்ந்த குடரைச் சூடுதலை மேற்கொண்டன சுழலும் விழியினையுடைய பேய், மீளுத லொழிந்த வேற்பொருள் மாறுபட்டவர் மார்பத்தை உருவின வேலைக் கையிலே திரித்து எ-று. (15)
1. மலிந்த 2. குறள். 774. |