களங்கழுமிய படையிரிய 1உளங்கிழித்தவேல் பறித்தோச்சின்று. (இ - ள்.) பொருகளத்தைப் பொருந்திய சேனைகெடத் தன் மார்பத்தைத் திறந்து வேலைப் பறித்து எறிந்தது எ-று. (வ - று.) மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல் கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த படுசுட ரெஃகம் பறித்து. (இ - ள்.) போரிடத்து வேந்தர் மாறுபாடு இனி என்னாமோ! கையிடத்துப்பற்றினான் கழல்வீரன்; வெய்தான மிகுங்கனலைச் சிதறி மணநாறு மார்பத்தைப் போழ்ந்த ஒளிதோன்றும் வேலைப் பறித்து எ-று. (16)
1. உளங்கழிந்த |